அடுத்த நாள் சர்வீக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது
. சாங் அவருடைய வீட்டிற்கு அவர் கூறிய தங்கத்தை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார் . சர்வீக்கும்
அவருடைய மனைவிக்கும் தாங்க முடியாத அதிர்ச்சியாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர் . ஆனால்
சர்வீயின் பெண் “சாங்கிற்கு நாம் வாக்கு கொடுத்து
விட்டதால் நிச்சயம் அவருக்கு என்னை மணமுடித்துக் கொடுக்க வேண்டும். நம் வாக்கை நாம் மாற்ற முடியாது” என்று கூறினார் . சர்வீக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும்
அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. இருவருக்கும்
திருமணம் முடிந்ததும் , அவர்கள் அந்த ஊரிலேயே இருந்தனர் . சாங்கும் பழைய படியே தோட்டத்தில்
வேலை செய்து கொண்டிருந்தார். அவருடைய மனைவியும்
அவருக்கு தோட்டத்தில் எல்லாவிதமான உதவியும் செய்ததுடன் சமையலறையும் அவரே கவனித்துக்
கொண்டார். இப்படி சிறிது நாட்கள் சென்ற பிறகு
சர்வீயின் உறவினர் ஒருவர் வந்து “ தாங்கள் தங்கள் மகளை இப்படி ஒரு முதிய தோட்டக்காரருக்கு
மணமுடித்துக் கொடுத்தது மிகவும் துரதிர்ஷ்டமானது . குறைந்த பட்சம் அவரை இந்த ஊரில்
இருந்து துரத்தி விடுங்கள் “ என்று அறிவுரை கூறினார் . சர்வீ சாங்கையும் தன்னுடைய பெண்ணையும் ஒரு விருந்துக்கு
அழைத்து , அவர்கள் இந்த ஊரில் இருப்பதால் தனக்கு தர்ம சங்கடமாக இருப்பதினால், அவரை ஊரை விட்டு சென்று விடுமாறு கூறினார் . இதைக்
கேட்டவுடன் சாங்கிற்கு வியப்பாக இருந்தது . “ உங்கள் மகள் உங்கள் அருகில் இருப்பதை
நீங்கள் விரும்புவீர்கள் என்று நினைத்தேன் “ என்று கூறினார் . ஆனாலும் “ தங்களுக்கு
விருப்பம் இல்லை என்றால் நாங்கள் நாளைக்கு வேறு இடத்திற்கு சென்று விடுகிறோம் “ என்று
கூறி விடை பெற்றார்.
பாகம் 2 முடிந்தது
No comments:
Post a Comment