Tuesday, July 2, 2024

இளவரசியும் தங்க சிங்கமும் - பாகம் 1

 

ஒரு ஊரில் ஒரு பணக்கார வியாபாரி இருந்தார் . அவருக்கு மூன்று மகன்கள் . முதல் மகன் தனக்கு இந்த உலகத்தை சுற்றிப் பார்க்க விருப்பம் இருப்பதால் அதற்கு உதவுமாறு தன் தந்தையிடம் கேட்டார் . அவர் “அதற்கு என்ன வேண்டும் ? “ என்று கேட்டபோது தனக்கு ஒரு கப்பலும் நிறைய பணமும் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்.  பணக்காரரும் அவ்வாறே செய்ய , முதல் மகன் தன்னுடைய கப்பல் பயணத்தை தொலைவில் உள்ள நாடுகளை பார்க்கும் எண்ணத்துடன் தொடங்கினார்.



சில தினங்களுக்கு பின் அவர் ஒரு பெரிய நகரத்தை அடைந்தார் . அங்கு கடற்கரையில் அவர் ஒரு விளம்பர அறிக்கையை பார்த்தார் . அதில் அந்த நாட்டின் அரசர்,  தன் மகளை யார் கண்டுபிடித்துக் கொடுக்கிறார்களோ அவர்கள் தன் மகளை மணந்து அந்த நாட்டில் அரசர் ஆகலாம் என்று அறிவிப்பு ஆணை அதில் இருந்தது . இந்த பலகையை பார்த்தவுடன் முதல் மகனுக்கு வேறு ஒன்றும் தோன்றாமல் இந்த நகரத்தை தான் ஆள வேண்டும் என்ற ஆசை தோன்றியது . ஆகவே அவர் உடனே அரசனிடம் சென்று என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் . அதற்கு அரசன் , இளவரசி இந்த அரண்மனையில் தான் எங்கோ இருக்கிறார் . நீ எங்கு வேண்டுமானாலும் அவரை தேடலாம் . அவரை கண்டுபிடித்தவுடன் உனக்கு அவளை மணம் முடிப்பேன்.



ஆனால் கண்டுபிடிக்க எட்டு தினங்களுக்குள் முடியாது போனால் உன்னை கொன்று விடுவேன் , என்றதற்கு  அந்த மகன் தன் மேல் உள்ள நம்பிக்கையால் உடனே சம்மதித்தார் .  ஏனென்றால் அந்த அரண்மனையில் தானே  எங்கோ இளவரசி இருக்க வேண்டும் என்று நினைத்து சம்மதித்தார்.  அவருக்கு அந்த இளவரசியை கண்டுபிடிக்க எட்டு நாட்கள் தரப்பட்டது.

( இந்த கதை ஒரு இத்தாலிய பழக்கதையிலிருந்து தழுவி எழுதப்பட்டது)


No comments:

Post a Comment