ஒரு ஜப்பானிய கிராமமான ஜமாத்து என்ற ஊரில் நடந்த நிகழ்வு இது .
அந்த கிராமத்தில் ஒரு ஏழைப் பெண் இருந்தார். ஏழையானாலும் மற்றவர்களுக்கு உதவுவதில் அவள் எந்த விதத்திலும் சளைத்தவள் அல்ல .
தினமும் அந்த ஊர் கோவிலுக்கு சென்று வணங்குவது அவளுடைய வழக்கம்.
அந்த கிராமத்தில் ஒரு புதிய பிரம்மாண்டமான கோவில் நிர்ணயிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள் . எல்லோரும் ஏராளமான பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள். மிகவும் பிரமாண்டமான நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு பெரிய சரவிளக்கும் அந்த கோவிலில் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நகரத்தின் ஒரு பணக்கார மனிதர் ஆயிரம் சர விளக்குகள் கொண்ட ஒரு விளக்கை அந்த கோவிலுக்கு அன்பளிப்பாக அளித்தார் . அந்த விளக்கில், அந்த விளக்கை விட பெரியதாக அவர் பெயர் மின்னியது . அவருடைய நோக்கம் தன்னுடைய பரந்த மனப்பான்மை உலகிற்கு தெரிய வேண்டும் என்பது. இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்த ஏழைப் பெண்ணுக்கு தானும் இந்த கோவிலுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
அவள் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்ட போது அது அழகாக இருந்ததுடன் , தலைமுடி கருகரு என்று பெரிதாக வளர்ந்திருப்பதை கண்டார். உடனே அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது தன்னுடைய தலைமுடியை விற்று அதில் வரும் பணத்தில் கோவிலுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
அந்த எண்ணம் தோன்றிய உடனே அந்த ஊரில் இருந்த விக்குகள் செய்யும் தொழிற்சாலைக்கு சென்று தன்னுடைய அழகான தலைமுடியை விற்று சிறிது பணத்தை சேர்த்தாள் . அந்த பணத்திற்கு அவளால் ஒரு சிறிய எண்ணெயில் எரியும் விளக்கு வாங்க முடிந்தது. அவளுடைய விளக்கு அந்தக் கோவிலில் பிரம்மாண்டமாக ஒளி வீசிக் கொண்டிருந்த பல பெரிய விளக்குகளை பார்க்கும்போது ஒரு சிறிய துளியாக இருந்தது. ஆனால் அந்தப் பெண் மகிழ்ச்சியாக இருந்தார் . தன்னால் என்ன முடியுமோ அதை செய்து விட்டோம் என்ற மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது . தன்னுடைய சொந்த பணத்தில் அந்த விளக்கு வாங்கியதில் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது .
அன்று இரவு அந்த கோவிலில் நடந்த விழாவுக்காக எல்லா விளக்குகளையும் ஏற்றி வைத்தனர். வந்த பக்தர்கள் அனைவரும் அந்த விளக்கு அலங்காரங்களை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பெரிய விளக்கை கோவிலுக்கு கொடுத்த அந்த பணக்கார நபரை மனதார பாராட்டினர். அந்த பணக்காரருக்கும் தன் நோக்கம் நிறைவேறிய திருப்தி இருந்தது.
இது நடந்து கொண்டிருக்கும்போதே பெரிய சூறாவளி காற்றில் கோவில் நடுவில் எரிந்து கொண்டிருந்த பெரிய விளக்குகள் எல்லாம் அணைந்தன . ஆனால் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த அவளுடைய சிறிய விளக்கு மட்டும் அணியாமல் எரிந்து கொண்டிருந்தது . அந்தக் கோவில் பூசாரி அதை பார்த்து வியந்தது மட்டுமல்லாமல், “ கடவுள் யார் உள்ளம் உணர்ந்து கொடுக்கிறார்களோ அவர்களுடைய தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறார். அதில் அவருக்கு பணக்காரர்களின் விளக்கை விட மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது “ என்று கூறியவுடன் அந்தப் பெண்ணிற்கு அடங்காத மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
( இந்த கதை ஒரு ஜப்பானிய பழக்கதைகளில் இருந்து எடுக்கப்பட்டது தழுவி எழுதப்பட்டது)
No comments:
Post a Comment