Tuesday, July 2, 2024

இளவரசியும் தங்க சிங்கமும் - பாகம் 3


சிறிது நாட்கள் சென்ற பிறகு, தன்னுடைய இரண்டு மூத்த சகோதரர்களை பற்றி எந்த தகவலும் வராததால் மூன்றாவது மகன் தன் தந்தையிடம் தனக்கு ஒரு கப்பலும் செல்வமும் கொடுத்தால் தான் தன் சகோதரர்களை தேடி அழைத்து வருவதாக கூறினார். அந்த வியாபாரிக்கும் வேறு வழி தெரியாததால்,  இதற்கும் சம்மதித்தார். மூன்றாவது மகனும் கப்பலில் ஏறி பயணம் செய்த போது , காற்றின் வழியே சென்று, ஒரு கடற்கரையில் தன் இரண்டு சகோதரர்களின் கப்பல் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

அவர் கண்ணிலும் அந்தப் பழைய, இளவரசியை தேடும் பலகை கண்ணில் பட்டது.  இப்பொழுது மூன்றாவது மகனுக்கு நிச்சயமாக தெரிந்து விட்டது, தன்னுடைய இரண்டு சகோதரர்களும் இளவரசியை தேடி அலைந்து கொண்டிருப்பார்கள் என்று. ஆனால் தன்னுடைய சகோதரர்களைப் போன்று இவர் நேராக அரசனைச் சென்று சந்திக்கவில்லை.  இளவரசியை கண்டுபிடிக்க தனக்கு சில விஷயங்கள் தெரிந்தால் சுலபமாக இருக்கும் என்று அவருக்கு தோன்றியது.  ஆகவே உடனடியாக அரண்மனைக்கு செல்வதை தவிர்த்து அங்கும் இங்கும் சிறிது நேரம் அலைந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் ஒரு கிழவி தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்தார்.  அந்த கிழவியுடன் பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கும்போது.  அந்த கிழவி

“நீ ஏதோ பிரச்சனையில் சிக்கி இருக்கிறாய் என்று தோன்றுகிறது எனக்கு நீ உதவினால் நான் உனக்கு உதவ முடியும்” என்று கூறினார் . முதலில் தயங்கினாலும் இந்த கிழவியிடமிருந்து தனக்கு ஏதேனும் ஒரு உதவி கிடைத்தால் நல்லது என்று எண்ணினார். ஆகவே அவரிடம் அந்த விளம்பரப் பலகை பார்த்ததையும் , தன் இரு சகோதரர்களைப் பற்றியும் கூறி, அதைப்பற்றி தெரியுமா?  என்று கேட்டார். அதற்கு அந்தக் கிழவி சிரித்துக்கொண்டே “உன்னிடம் நிறைய செல்வம் இருந்தால் , என்னால் உனக்கு உதவ முடியும்”  என்று கூறினார். மூன்றாவது மகன்  அதிர்ச்சி அடைந்தாலும், அந்தக் கிழவி என்னதான் கூறுகிறார் என்று கேட்பதில் ஆவலாக இருந்தார். அந்த க் கிழவி கூறிய திட்டம் அவருக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது.

(இந்தக் கதை ஒரு இத்தாலிய பழங்கதையை தழுவி எழுதப்பட்டது)


No comments:

Post a Comment