Tuesday, July 2, 2024

இளவரசியும் தங்க சிங்கமும் - பாகம் 5

 

 அந்த ஏழாவது கதவை திறந்து கொண்டு அந்த அரசன் பார்த்ததை சிங்கத்துக்கு உள்ளிருந்து இந்த மூன்றாவது மகன் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார் . அந்த இளவரசி அங்கு தன்னுடைய 11 தோழிகளுடன் இருந்தார்.

அவர்கள் எல்லோருமே இளவரசி மாதிரியே இருந்ததுடன் அவரைப் போலவே உடையும் அணிந்திருந்தனர் . அதனால் அந்த மூன்றாவது மகனுக்கு இளவரசியை எப்படி அடையாளம் காண்பது என்று தெரியவில்லை . அரசன் தன் மகளைப் பார்த்து”  இந்த சிங்கத்தை இன்று ஒரு நாள் உனக்கு நான் பரிசாக கொடுக்கிறேன்.  நாளை இதை நான் திரும்ப எடுத்துச் சென்று விடுவேன் . ஆகவே இன்று ஒரு நாள் இதை நீ என் பரிசாக வைத்துக் கொள்”  என்று கூறினார் . இளவரசிக்கு அதை பார்த்து பரவசத்துடன் தன் அருகில் அணைத்து வைத்துக் கொண்டு,  அந்த இரவை கழிக்க விரும்பினார் . மூன்றாவது மகன்,  அந்த சிங்கத்துக்குள் இருந்து , அந்த இளவரசியை பார்த்து , “ இளவரசி உங்களை கண்டுபிடிப்பதற்கு நான் எவ்வளவு கஷ்டப் பட்டேன் என்று உங்களுக்கு தெரியாது, “  என்று கூறினார் . அந்த சிங்கம் பேசுவதை பார்த்து இளவரசி அதிர்ச்சி அடைந்தார் . தன் தோழிகளை பார்த்து,  இந்த சிங்கம் பேசுகிறது,  என்று கூறியவுடன் தோழிகள் அந்த இளவரசி உளறுகிறார் என்று நினைத்து,  அவரை தனியாக விட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்தனர் . அந்த சிங்கத்தில் எதுவும் தவறாக இருப்பதாக அவர்களுக்கு தோன்றவில்லை.

இளவரசி தனியாக இருந்தபோது அந்த மூன்றாவது மகன்  சிங்கத்திடமிருந்து வெளியே வந்து,  இளவரசியிடம் வந்து நின்றார். 

அவரைப் பார்த்தவுடன் முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும்,  பிறகு தன்னை கண்டுபிடித்துவிட்ட அவர் மீது இளவரசிக்கு அவர் மீது

  காதல் வந்தது.  இப்பொழுது தன்னுடைய தந்தையின் பரிட்சையில் இந்த இளைஞன் நிச்சயம் தேடி விடுவான் என்று தெரிந்தது.  ஆனாலும் எப்படி அவர் தன்னை மற்ற 11 தோழிகளிடமிருந்து வேறுபடுத்தி கண்டுபிடிப்பார் , என்ற ஐயம் அவளுக்கு எழுந்தது.  ஆகவே அவர் ,  அந்த மூன்றாவது மகனிடம் “ நாளை நான் இந்த சிவப்பு கயிற்றை என் கையில் கட்டி இருப்பேன் . அதிலிருந்து தாங்கள் என்னை அடையாளம் கண்டு கொள்ளலாம்”  என்று கூறினார் .

 (இந்த கதை இத்தாலிய பழங்கதையை தழுவி எழுதப்பட்டது)


No comments:

Post a Comment