Saturday, August 17, 2024

மகத மன்னனும் மதி மந்திரியும் - பகுதி 2

 


 

 மறுநாளே மந்திர குப்தா தன்னுடைய நம்பிக்கைக்கு உகந்த சிலருடன் மகதத்தில் இருந்து வாரணாசிக்கு கிளம்பினார் . வாரணாசியில் அவர் ஒரு சன்னியாசி போல் தன்னை காட்டிக் கொண்டார்.  அவருடன் சென்ற அவருடைய தொண்டர்கள் அவர் பெரிய மகான் என்றும் பல அதிசயங்களுடன் செயற்கரிய செயல்களை செய்ய முடிந்தவர் என்றும் செய்தியை அந்த நாட்டில் பரப்பினர்.  அந்த மந்திரியும் அவருடைய தொண்டர்களும் வாரணாசியின் பல பகுதிகளில் சுற்றி அலைந்தனர்.  அலைந்ததன் நோக்கம் பத்ரதன்தாவின் பயிற்சியாளர் யார் என்று கண்டுபிடிப்பது தான்.  இந்த கடும் முயற்சியில் ஒரு நாள் அந்த யானை பயிற்சியாளர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.  தன்னுடைய சன்னியாசி வேடத்தில் இருந்த மந்திரி அந்த பயிற்சியாளரின் நித்திய வேலைகளை எப்பொழுது எப்படி செய்கிறார் என்று சில நாள் கண்காணித்தார் . அவருக்கு அந்த யானை பயிற்சியாளர் தன் மனைவியை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்று வேலை முடித்தவுடன் திரும்பி வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பதை கவனித்தார்.  இப்படி இருக்க ஒரு நாள் அந்த யானைப்பாகன் மனைவியை நாலு ஆயுதம் தாங்கிய மனிதர்கள் எங்கோ அழைத்துச் செல்வதை கவனித்தனர் மந்திரியும் அவர்   தொண்டர்களும்.  அவர்கள் பின்னால் சென்று அவர்கள் யானைப்பாகன் மனைவியை எங்கு வைத்திருக்கின்றனர் என்பதையும் கவனித்துக் கொண்டு வந்தனர் . இவ்வளவையும் கவனித்த மந்திரி மந்திர குப்தா வேறு எதுவும் செய்யாமல் தன் இடத்தில் போய் அமர்ந்து கொண்டார்.  யானை பயிற்சியாளர் மிகவும் சோகத்துடன் அவர் வீட்டில் இருப்பதை அறிந்த மந்திரியின் தொண்டர்கள் , அந்த யானைப்பாகனிடம் சென்று அவர்களின் குருவின் அருமை பெருமைகளை கூறி”  நீங்கள் அவரை தொடர்பு கொண்டால் உங்கள் மனைவியை கண்டுபிடிக்க முடியும் என்று எங்களுக்கு தோன்றுகிறது “ என்று கூறினர் .

பகுதி இரண்டு முடிவடைந்தது

 

(இந்த கதை கதா சரித்  சாகரா விலிருந்து தழுவி எழுதப்பட்டது)

No comments:

Post a Comment