Saturday, August 17, 2024

அன்னையின் அருள் - பகுதி 3

 

அந்த பிரார்த்தனையை கேட்ட பென்டன் சாமா வின் மகன்,  உதவுவதாக கூறி அன்று இரவு பலத்த மழை அங்கு பொழியும்படி ஏற்பாடு செய்தார் . மழையுடன் கூடிய பயங்கரமான இடியும் வந்தது.  அந்த இடி ஐந்து தடவை இடித்தது.  அதில் அந்த ஐந்து பறக்கும் முதலைகளும் மடிந்து விழுந்தன . மறுநாள் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்த பொழுது நல்ல சூரிய வெளிச்சம் இருந்தது.  ஆனால் அந்த சதுப்பு நிலத்தில் இருந்த ஐந்து முதலைகளும் இறந்த நிலையில் கிடந்தன . அந்த சதுப்பு நிலம் இருந்த இடத்தில் ஒரு அழகான தீவு தோன்றியிருந்தது. அந்த தீவில் இருந்த ஒரு வானவில்லின் மீது பென்டன் சோமா அமர்ந்திருந்ததை மக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்த னர் . அந்த இடத்தில் அவருக்கு ஒரு கோவிலும் எழுப்பினர் . பறக்கும் முதலைகளின் தொல்லை தீர்ந்ததால் உமேசானின் தந்தை மகிழ்ச்சியுடன் அந்த மீனவனுக்கு தன் மகளை மணம் முடித்தார்.  அவர்கள் அதன் பிறகு மகிழ்ச்சியாக வெகு காலம் முதலைகளின் பயம் இன்றி வாழ்ந்து வந்தனர் .

 (இது ஒரு ஜப்பானிய பழ கதையிலிருந்து தழுவி எழுதப்பட்டது)


No comments:

Post a Comment