சமுத்திர சூரா சிறையில் அடைக்கப்பட்டவுடன் அவருக்கு
என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர் சிவனை நினைத்து தன்னை இதிலிருந்து காக்கும்படி
வேண்டினார் . அந்த சமயத்தில் அந்த நாட்டு அரசனுக்கு தன்னுடைய அரச சபையில் ஒரு குரல்
ஒலித்தது . “இந்த வியாபாரி எந்தத் தவறும் செய்யவில்லை . அவன் திருடனும் இல்லை . அதை
திருடியவன் இறந்தவுடன் அவனிடம் இருந்த நகையை இவர் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்
. ஆகவே இவரை இதற்காக தண்டிப்பது, ஒரு தவறு
செய்யாத மனிதனை தண்டிப்பதற்கு சமம்” என்ற குரல் கேட்டது .
அப்பொழுது அந்த அரசன் தன் மகளான இளவரசியிடம் அந்த நெக்லஸை
கொடுப்பதற்காக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது
அந்த வழியாக பறந்து வந்த கழுகு கீழே இறங்கி அவர் கையில் இருந்து அந்த நகையை பறித்துக்
கொண்டு பறந்து சென்றது . அப்பொழுது தான் அந்த
அரசனுக்கு தன்னுடைய தவறு புரிந்தது . தன் தவறை உணர்ந்து சமுத்திர சூராவை விடுதலை செய்து
அவருக்கு நிறைய செல்வங்களும் கொடுத்து அனுப்பி வைத்தார்.
சிறிது காலம்
கடந்த பிறகு சமுத்திர சூரா திரும்பவும் கப்பல் பயணம் செய்து தன் வியாபாரத்தை தொடங்கினார். இப்பொழுது அவர் வேறு சில வியாபாரிகளுடன் சேர்ந்து
கப்பல் பயணத்தை தொடங்கினார் . அவர்கள் ஒரு புதிய நகரத்தை அடைந்தனர் . மறுநாள் , காட்டில்
ஒரு இரவு அவர்கள் தங்கியிருந்தனர். ஒரு கொள்ளை
கும்பல் அந்த வியாபாரிகளை தாக்கத் தொடங்கி அவர்களை எதிர்த்தவர்களை கொல்ல தொடங்கினர்
.
(இந்த கதை கதா சரித் சாகரா என்ற இந்திய பழங்கதையை தழுவி
எழுதப்பட்டது).
No comments:
Post a Comment