அந்த கொள்ளைக்காரர்கள் வியாபாரிகளை தாக்கத் தொடங்கியவுடன்
சமுத்திர சூரா எழுந்து அவர்கள் பார்க்கும் முன்,
ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார் . அந்த இரவு முழுவதும் அங்கிருந்து
அவர் அந்த கொள்ளையர்களை கவனித்துக் கொண்டிருந்தார் . அவர்களும் தங்களால் முடிந்த அளவு
அந்த வியாபாரிகளிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள் . இதையெல்லாம்
சமுத்திர சூரா மரத்திலிருந்து கவனித்து கொண்டு இருந்தார் . விடிந்தவுடன் அவருக்கு ஒரு திகைப்பான விஷயம் கண்ணில் பட்டது.
அவர் அமர்ந்திருந்த அதே கிளையில் ஒரு பறவை கூட்டில் மிகவும் அரிதான மதிப்பு
மிகுந்த நகைகள் இருந்தன. அதில் இருந்த ஒரு
நகை அந்த அரசனிடம் இருந்து கழுகு பறித்து வந்த நெக்லஸூம் இருந்தது. மனதில் சிவனைத்
தொழுது, அவன் அருளை நினைத்து மகிழ்ந்து , தன்னுடைய
நாடான ஹரசபுறாவிற்கு வந்து சம்பாதித்த செல்வங்களை வைத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தார்
. அவருக்கு விதி இருந்தால் எப்படியும் அவர் அவர்களுக்கு உண்டான செல்வ செழிப்பு வந்து
சேரும் என்று இதிலிருந்து புரிந்தது .
(இந்த கதை சரித் கதா சாகரா என்ற இந்திய பழங் கதையிலிருந்து தழுவி எழுதப்பட்டது)
No comments:
Post a Comment