இன்று நாம் பார்க்கப் போகும் கதை நம் எல்லோருக்கும் அறிமுகமான தெனாலிராமன் பற்றியது.
கிருஷ்ணதேவராயர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் மன்னராக இருந்தபோது அவருக்கு மதி மந்திரியாகவும், அவருடைய அவையில் கலக்கமான சூழ்நிலை வரும்போது அவையை கலகலப்பாக்கும் ஒரு பொறுப்பும் அவருக்கு இருந்தது.
தெனாலிராமனுக்கு அவையை கலகலப்பாக வைத்துக் கொள்வதுடன் சில சமயங்களில் அந்த அவையில் உள்ளோர்களுக்கும், மன்னருக்கும் சில விஷயங்களை எளிதாகவும் எல்லோருக்கும் புரியும் படியும் சொல்ல வேண்டிய பொறுப்பு இருந்தது. ஆனால் அதை மிகவும் கவனமுடன் யாருக்கும் கோபம், தாபம் ,இல்லாத வகையில் செய்ய வேண்டி இருந்தது. தெனாலிராமனுக்கு அவனுடைய இயற்கையான கலகலப்பான செய்கையால் எவரையும் புண் படுத்தாமல் இந்த வேலையை செய்ய முடிந்தது.
ஆனால் யானைக்கும் அடிசறுக்கும் என்பதைப் போல் ஒரு நாள் ராமனின் சாதாரணமாக நன்றாக முடியும் அவருடைய செயல், சற்று எல்லை மீறி மன்னருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. அதனால் மன்னர் ராமனை, பூமியில் புதைத்து யானையின் காலால் இடரும்படி உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் படி காவலர்கள் ராமனை ஊருக்கு வெளியே ஒரு இடத்தில் புதைத்து வைத்துவிட்டு, அவனுடைய தலை மட்டும் வெளியே தெரியும்படி வைத்துவிட்டு, யானையை அழைத்து வருவதற்காக சென்றனர். இந்த நிலையில் ராமனால் எப்படியும் தப்பிக்க முடியாது என்ற நம்பினார்கள்.
ராமனை அவர்கள் புதைத்த இடம் ஒரு நதிக்கரையில் இருந்ததால் ஒரு வண்ணான் அழுக்குத் துணிகளை துவைப்பதற்காக அங்கு அப்பொழுது வந்து சேர்ந்தார்.
அந்த வண்ணானுக்கு இயற்கையிலேயே சிறிது கூன் இருந்தது. அது வருட கணக்கில் அதிக சுமை தூக்கி வந்து, அது தாங்க முடியாத அளவுக்கு கூனனாக மாறிப் போயிருந்தார் .ராமனை இந்த நிலையில் பார்த்தவுடன் அவருக்கு தூக்கி வாரி போட்டது. யார் இவரை இப்படி பூமியில் புதைத்து வைத்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார். பக்கத்தில் சுற்று முற்றும் பார்த்தபோது காவலர்களும் யாரும் இல்லை .ஆகவே அவருக்கு இது தண்டனைக்காக அவரை யாரும் புதைத்து வைத்திருப்பதாக தோன்றவே இல்லை. ராமனை பார்த்தவுடன் இவர் ஒரு பெரிய யோகியாக இருக்க வேண்டும். ஆகவே தான் இப்படி மண்ணுக்குள் புதைத்து இருந்த போதும் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று எண்ணிக் கொண்டார். ஆகவே ராமனை பார்த்து” ஐயா இங்கு தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு ராமன் ஒரு புன்னகையுடன் “நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ஞானி இல்லை. உன்னை மாதிரியே நானும் ஒரு சாதாரண வண்ணான் தான் என்று கூறினார்.
அந்த வண்ணான் ஆச்சரியத்துடன் “அப்படி என்றால் தாங்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். தன்னுடைய இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படி அசகாய சாகசம் செய்வது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய கேள்விக்கு இராமன்” நானும் உங்களைப் போல் ஒரு வண்ணான் தான். தினமும் துணிகளை சுமந்து சுமந்து எனக்கு கூன் விழுந்து விட்டது. அதை சரி செய்வதற்காக இப்பொழுது இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறேன்” என்று கூறினார் .அதற்கு அந்த வண்ணான் “கூனை நிமிர்த்துவது இவ்வளவு எளிமையான முயற்சியால் முடியுமா? என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அதற்கு ராமன் “எளிதாக முடியும் “என்னை நீ வெளியே இப்பொழுது எடுத்து விட்டால் இந்த இடத்தில் உன்னை வைத்துவிட்டு உன் கூனை சிறிது நேரத்துல என்னால் சரி செய்ய முடியும்” என்று கூறினார் இவ்வளவு எளிதாக கூனை நிமிர்ந்த முடியும் என்பதில் அந்த வண்ணனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது . உடனே ராமனுக்கு அருகிலேயே சிறிது பள்ளம் தோண்டி அந்தப் பள்ளத்தை பெரிதாக்கி ராமனை வெளியே வரச் செய்தார். அப்பொழுது ராமன் தெளிவாக நேராக எழுந்து நிற்பதை பார்த்தவுடன் அவருக்கு இவ்வளவு எளிதான ஒரு சிகிச்சை தனக்கு யாரேனும் செய்ய மாட்டார்களா? என்ற எண்ணம் தோன்றியது. அதனால் ராமனிடம்” தயவு செய்து என்னை இந்த மாதிரி புதைக்க உதவுகிறீர்களா?” என்று கேட்டவுடன் மறுக்க முடியாமல் செய்வது போல இராமன் அவர் சொன்னபடி செய்ய ஆரம்பித்தார். ஆனால் இந்த வேலை முடிந்தவுடன் ஒரு யானை தன்னை நோக்கி வருவதை பார்த்து அந்த வண்ணான் கதி கலங்கிப் போனார். வேறு வழி இல்லாமல் “நான் குற்றவாளி அல்ல, என்னுடைய கூனை நிமிர்த்துவதற்காக ஒரு பெரியவர் சொன்னதற்காக இந்த பள்ளத்தில் இருக்கிறேன் இதற்கு முன் இங்கு இருந்த வண்ணான் இந்த சிகிச்சையில் குணமாகி வெளியே வந்ததை பார்த்தேன். ஆகவே அவர் என்னை இப்படி நிற்க வைத்து விட்டார். இந்த யானையை தள்ளிப் போகச் சொல்லுங்கள்” என்று கதறியவுடன், காவலர்களுக்கு உண்மை புரிந்தது. காவலர்களும் மன்னரிடம் சென்று நடந்ததை கூறினார்கள். தெனாலிராமனின் சாமர்த்தியத்தை கண்டு வியந்து அவருடைய தண்டனையை மன்னர் நிறுத்தி வைத்தார் என்று சொல்லவும் வேண்டுமா?
Audio Story on Youtube
(இந்தக் கதை இந்தியாவில் செவி வழியாக வழி வழியாக சொல்லப்படும் கதை)