ஒரு இளவரசன் நகர்வலம் வரும் பொழுது ஒரு பெரிய புல்வெளியில் தன் குதிரையில் வந்து கொண்டிருந்தார் . அப்பொழுது அருகில் ஒரு பெரிய பள்ளத்தில் இருந்து அழுகை குரல் அவருக்கு கேட்டது . குதிரையிலிருந்து இறங்கி அவர் சென்று பார்த்த போது ஒரு மூதாட்டி அந்த பள்ளத்தில் இருந்து வெளியே வர தவித்துக் கொண்டிருந்தார் . இளவரசனை பார்த்தவுடன் “என்னை தயவு செய்து இதிலிருந்து மேலே ஏற்றி விடு” என்று கேட்டார். இளவரசனும் அந்த பெண்மணி வெளியே வர உதவி செய்தார் . அந்தப் பெண்மணி கண்களில் நீருடன் அவருக்கு நன்றி தெரிவித்தார் . அப்பொழுது அந்த இளவரசன் “ நீங்கள் எப்படி இந்த பள்ளத்தில் விழுந்தீர்கள் ? என்று கேட்டார் . அதற்கு” நான் பக்கத்தில் உள்ள நகரத்தில் என்னுடைய முட்டைகளை விற்றுவிட்டு வரும்பொழுது தவறி இந்த பள்ளத்தில் விழுந்து விட்டேன்
நீங்கள் மட்டும் இப்பொழுது வராது இருந்தால்
இங்கேயே வெகு நேரம் இருந்திருப்பேன் . தாங்கள் என்னை காப்பாற்றி விட்டீர்கள் . நன்றி” என்று கூறினார். அதற்கு அந்த இளவரசன் “ உங்களுக்கு உடம்பில் நிறைய காயம் ஏற்பட்டிருக்கிறது
. ஆகவே நான் உங்களை உங்கள் வீட்டில் விடுகிறேன் “ என்று கூறி அவரையும் தன் குதிரையில்
ஏற்றிக்கொண்டார் . அவர்கள் அந்தப் பெண்மணியின் வீட்டை அடைந்தனர். அங்கு சென்றவுடன் அந்தப் பெண் “ இப்பொழுது சிறிது
நேரம் இங்கே இருங்கள் . நான் இப்பொழுது வந்து விடுகிறேன் “ என்று கூறிவிட்டு சிறிது
நேரத்தில் திரும்பி வந்தார் . அப்பொழுது அந்தப் பெண்மணி “ நீங்கள் மிகவும் கருணை உள்ளவராக
இருப்பதால் உங்களுக்கு ஒரு பரிசு தர விரும்புகிறேன். ஒரு அழகான பெண்ணை மண முடிக்க உங்களுக்கு விருப்பமா?” என்று கேட்டாள்
. இளவரசருக்கு மிகவும் வியப்பாக இருந்தாலும் “ஆம்” என்ற முறையில் தன் தலையை ஆட்டினார் .
அதற்கு அந்த மூதாட்டி “ அந்தப் பெண் இந்த நாட்டின் மலர் ராணியின் மகள் . எனக்குத் தெரிந்தவரை
இந்த உலகிலேயே மிகவும் அழகானவள் . அவளை நீ மண முடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அதில் ஒரு பிரச்சனை இருக்கிறது . அவள் இப்பொழுது
ஒரு” பறக்கும் நாகத்தின் (dragon) பிடியில்
சிக்கி இருக்கிறாள். அவளை அதனிடமிருந்து நீ
விடுவித்தால் , அவளை நீ மணக்கலாம்” என்று கூறினாள்
.
அந்த மூதாட்டி இப்படி கூறிவிட்டு இளவரசனிடம் ஒரு மணியை கொடுத்தாள் . அதை ஒரு
முறை அடிக்கும் போது பறவைகளின் அரசனான கருடன் உன் முன் தோன்றுவார் . இரண்டு முறை இந்த
மணியை அடித்தால் , நரிகளின் மன்னன் உன் உதவிக்கு வருவார் . மூன்று முறை இந்த மணியை
அடித்தால் , மீன்களின் தலைவன் உனக்கு உதவ நிச்சயம் வருவார் .
இந்த அழகான இளவரசியை மீட்கும் பணியில்
இந்த மூவரும் உனக்கு நிச்சயம் உதவுவார்கள்.
ஆகவே நீ அந்த இளவரசியை அந்த பறக்கும் நாகத்திடமிருந்து காப்பாற்றும் முயற்சியில்
உடனே இறங்கு” என்று கூறி முடித்தார் .
No comments:
Post a Comment