Saturday, March 30, 2024

மூன்று இளவரசிகள் - பாகம் 2

 

இப்படி வெகு நாட்கள் சென்ற பின் ஒரு ஏழை அந்த காட்டில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு பிடில் கிடப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு அதை எடுத்தவுடன் அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது . அந்த ஃபிடில் நிச்சயமாக ஏதோ ஒரு அதிசயம் போல் இருந்தது .ஏனென்றால் அந்த ஏழையால் அதில் பாட்டு வாசிக்க முடிந்தது மட்டுமல்லாமல் அந்த ஃபீடில் தானே பாடவும் செய்தது.

 


அவர்  அதை எடுத்துக்கொண்டு தன் நாட்டிற்கு வந்தது மட்டுமல்லாமல் , எல்லா இடங்களுக்கும் சென்று அதில் பாட்டு பாடினார்.  அதனுடன் அந்த பிடிலும் தானாகவே பாடியதனால் மக்கள் அந்த அதிசயத்தை காண கூடியபோது , அந்த மனிதன் ,அந்த ஃபிடில் , இரண்டுமே புகழ் பெற ஆரம்பித்தன .  அந்த மனிதன் புகழ் அடைந்ததுடன் பணக்காரனாகவும் மாறியதில் எந்த அதிசயமும் இல்லை . அவனிடம் புகழுடன் பணமும் சேர்ந்தது . சீக்கிரமே இந்த விஷயம் இளவரசிகளின் அப்பாவான  ராஜாவின் காதுகளை சென்று அடைந்தது .  ராஜா அவரை அழைத்து தனக்கும் தன் குடும்பத்திற்கும் மட்டும் தனியாக வந்து இந்த அதிசயத்தை பாடியும்,  செய்தும் காட்டும்படி கேட்டுக் கொண்டார் . அவர் “நீங்கள் மிகவும் அற்புதமாக பாடுகின்றீர்கள் என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள் ஆகவே என்னுடைய நாட்டிற்கு வந்து இந்த என் அரண்மனையை

கௌரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் . அந்த நாட்டின் மன்னன் கேட்டும் அந்த முன்னாள் ஏழை வர மறுத்து விட்டார்.  ஏன்  என்று கேட்டபோது உங்களால் நான் விரும்பும் அளவுக்கு பணம் கொடுக்க முடியாது . என்னிடம் ஏராளமாக பணம் இருக்கிறது.  நான் இப்பொழுது அங்கு இங்கு சென்று தான் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.  ஆகவே என்னால் உங்கள் நாட்டிற்கு வர முடியாது என்று கூறிவிட்டார் .

இப்படி அந்த ராஜா பலமுறை விரும்பி கேட்டும் அவர் அரண்மனைக்கு வந்து வாசிக்கவும்,  பாடவும் மறுத்துவிட்டபோது , அந்த ராஜா மிகவும் வருத்தத்துடன் “ எங்கள் நாட்டில் பல துக்ககரமான நிகழ்வுகள் நிகழ்ந்துவிட்டன.  நாங்கள் எங்கள் அருமை மகளை இழந்து விட்டோம் . நீங்கள் இங்கு வந்து சிறிது நேரம் உங்களுடைய இசையால் எங்கள் கவலைகளை போக்கினால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்”  என்று கூறினார் . இவ்வளவு துக்கத்துடன் மன்னர் கூறியவுடன் அவரும் சரி என்று சொல்லி அந்த ராஜாவின் அரண்மனைக்கு வந்து பாட்டு பாடுவதற்கு சம்மதித்தார்.  அப்பொழுது அவர் தன்னுடன் தன் பிடிலும் பாடும் என்று நிச்சயமாக நம்பினார். அவர் நம்பியப்படியே அந்த பிடிலும் ஒரு பாட்டு பாடியது.  அதைக் கேட்டவுடன் அங்கிருந்த எல்லோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.  அந்தப் பாட்டு அந்த மூன்றாவது இளவரசி பாடுவது போல் இருந்தது.  எப்படி  ராணியின் விருப்ப்படி திராட்சை பழங்கள் எடுக்க தோட்டத்துக்கு சென்றதுடன் தொடங்கி , எப்படி இரு சகோதரிகள் மூன்றாவது சகோதரியை  ஒரு டிரெஸ்ஸுக்காக கொன்றனர் என்றவரை முடிந்தது.  அப்பொழுது அலைந்து கொண்டிருந்த அந்த மூன்றாவது அன்பான இளவரசியின்  ஆவி அந்த பிடிலில் அடைக்கலமானது வரை சொல்லி முடித்தது . அப்பொழுதுதான் அங்கு உள்ள எல்லோருக்கும் புரிந்தது இதுவரை தானாக பாடியது அந்த பிடில் இல்லை,  அதனுள் இருந்த அந்த இளவரசியின் ஆவி என்று.  இதனால் கடும் கோபம் கொண்ட ராஜா தன் மூத்த இரு மகள்களையும் தண்டிக்க வேண்டும் என்று விரும்பினார் . அப்பொழுது எல்லோரும் அதிசயிக்கும் விதமாக அந்த பிடிலில் இருந்து அந்த மூன்றாவது இளவரசி எல்லோரும்  பார்க்கும்படி அவர்கள் முன் தோன்றினாள் . அவள் தன்னுடைய மூத்த சகோதரிகளை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி அந்த ராஜாவிடம் கேட்டுக் கொண்டாள்.  அப்படி செய்தால் எல்லோரும் பழையதை மறந்து திரும்பவும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கூறினாள்.  இதை கேட்ட ராஜா மிகவும் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார்.  ஏனென்றால் அவருக்கு தன் மகள் உயிருடன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  இதற்குப் பிறகு அவர்கள் எல்லோரும் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள்

 


(இந்த கதை அங்கேரி நாட்டின் பழங்கதைகளில் இருந்து எடுக்கப்பட்டது)

No comments:

Post a Comment