ராஜா ராணி கதைகளை பார்த்து வந்த நாம் இன்று பார்க்கப் போவது மூன்று இளவரசிகளைப்
பற்றிய கதை .
ஒரு ராஜா ராணிக்கு மூன்று இளவரசிகள் இருந்தனர் .அதில் முதல் இருவர் கெட்ட எண்ணம்
படைத்தவர்களாக இருந்தனர் . மூன்றாவது இளவரசி அன்பானவராக இருந்ததால் குடிமக்கள் அவரை
மிகவும் நேசித்தனர்.
ஒரு நாள் ராணி தன் 3 பெண்களையும் கூப்பிட்டு “இன்று நான் உங்களுக்கு ஒரு சிறிய
பரிட்சை வைக்கப் போகிறேன். என்னிடம் ஒரு சிவப்பு நிற டிரஸ் இருக்கிறது அது உங்கள் மூவருக்குமே மிகவும் பிடிக்கும் என்று
எனக்குத் தெரியும். அதனால் உங்களில் திறமையானவர் அதை பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
அதை நீங்கள் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் உங்களில் யாருக்கு கொடுப்பது என்பதில் எனக்கு
தீர்மானம் செய்ய முடியவில்லை . அதனால் உங்களுக்கு ஒரு பரிட்சை, நம் அரண்மனையைச் சுற்றி ஏராளமான திராட்சை கொடிகள்
இருப்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் வெளியே
சென்று அதை பறித்து வர வேண்டும். யார் மிக
அதிகமாக கொண்டு வருகிறீர்களோ அவர்களுக்கு இந்த ஆடையை கொடுப்பதாக தீர்மானித்திருக்கிறேன்
“ என்றார்
உடனே அந்த மூவரும் வெளியே ஓடினர். மூவருமே அதிக பழங்களை பறிக்க முயலும் போது, முதல் இரண்டு சகோதரிகளுக்கு புரிந்தது மூன்றாவது
பெண் மிகவும் அதிகமாக பழங்களை பறித்திருக்கிறார் என்று.அவள் இதை எடுத்துக் கொண்டு அம்மாவிடம்
சென்றால் அவளுக்குத்தான் அந்த ஆடை கிடைக்கும் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் இல்லை.
அதை ஏதேனும் செய்து தடுக்க வேண்டும் என்று
நினைத்து இருவரும் அந்த மூன்றாவது இளவரசியை
கொன்று , அவளுடைய உடலை அந்த இடத்திலேயே புதைத்து விட்டு அரண்மனை நோக்கி சென்றார்கள்
. அங்கு சென்ற அவர்கள் ஓ என்று கதறி ராணியிடம் “நாங்கள் பழங்களை பறிக்கச் சென்ற இடத்தில்
மூன்று திருடர்கள் எங்களை தாக்கினார்கள் . .நாங்கள் எவ்வளவோ முயன்றும் எங்களால் அவர்களை
வெல்ல முடியவில்லை. அவர்கள் தங்கையை கொன்று
விட்டார்கள். நாங்கள் எவ்வளவு முயன்றும் அவளை காப்பாற்ற முடியவில்லை” என்று சொல்லி கதறினார்கள். இதைக் கேட்ட ராஜாவும் ராணியும் வருத்தப்பட்டார்களே
தவிர, இந்த இருவரையும் சந்தேகப்படவில்லை.
இந்நிலையில் இளவரசி கொல்லப்பட்ட இடத்திலிருந்த பிடில் (வயலின்) இதுவரை யார் கண்ணிலும் படவில்லை என்பது ஒரு அதிசயம்.
(ஹங்கேரி நாட்டின் பழங்கதைகளில் இருந்து எடுக்கப்பட்டது . இந்த கதை பாகம் இரண்டில் தொடர்கிறது.)
No comments:
Post a Comment