குழந்தைகளே இன்று நாம் பார்க்க போகும் கதை யானை, மற்றும் முதலையை பற்றியது.
உங்களுக்கு தெரியுமா பழங்காலங்களில் யானைக்கு இப்பொழுது இருப்பது போல் நீண்ட தும்பிக்கை கிடையாது. இப்பொழுது மற்ற மிருகங்களுக்கு இருப்பது போல் சிறிது நீண்ட மூக்கு தான் இருந்தது. ஒரு குட்டி யானை தன் சிறிய மூக்கை வைத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள ஆற்றில் தண்ணீர் குடிக்க சென்றது.
ஆனால் அதற்குத் தெரியாமல் ஒரு சிறிய முதலை அந்தத் தண்ணீரில் மிதந்து வந்து அந்த குட்டி யானையை நெருங்கியது.
குட்டி யானை தண்ணீர் பருக தன் மூக்கை தண்ணீரில் நுழைத்தவுடன் அந்த முதலை சிறிது சிறிதாக முன்னேறி அந்த யானையை தண்ணீருக்குள் இழுக்க முயற்சி செய்தது.
யானைக்கும் முதலைக்கும் சிறிது நேரம் கயிறு இழுக்கும் போட்டி போல் போர் நடந்து கொண்டிருந்தது.
இந்த இழுப்பறி நிகழ்ந்து கொண்டிருந்தபோது ஒரு வினோதமான நிகழ்வும் நிகழ்ந்தது.
அந்த யானையின் மூக்கு சிறிது சிறிதாக பெரிதாக ஆரம்பித்தது. அந்த யானையும் தன் பெரிதான மூக்கை வைத்து அந்த முதலையை ஒரு தள்ளு தள்ளிவிட்டு தண்ணீரை விட்டு ஓடியது.
அப்பொழுதுதான் அந்த யானைக்கு புரிந்தது தன்னுடைய மூக்கு சாதாரணமாக இல்லாமல் பெரிதாக இருந்தது கண்டு அது ஆச்சரியப்பட்டது. ஆனாலும் அந்த யானை சிறிது நேரம் பழையபடி தன்னுடைய மூக்கு அதன் பழைய நிலைக்கு வரும் என்று எதிர்பார்த்தது. அது நடக்காமல் போகவே அதன் ஆச்சரியம் அதிகமானது. அப்படியும் அந்த யானைக்கு தன்னை இந்த மூக்குடன் பிறரிடம் பழகுவதற்கு சிறிது வெட்கமாக இருந்தது.
ஆனால் சிறிது நேரத்திலேயே அதற்கு புரிந்தது இம்மாதிரி பெரிய மூக்கு தனக்கு இருப்பது சாதகமான ஒரு விஷயம். அதனால் எளிதாக பகைவர்களை விரட்டுவதுடன் எளிதாக உணவையும் தண்ணீரையும் தன் வாய்க்குள் உண்ணவும் குடிக்கவும் முடியும் என்பதை உணர்ந்து அது மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.
அந்த நிமிடத்தில் இருந்து அதற்கு புரிந்தது இது தனக்கு கிடைத்த வரம் என்று.
அன்றிலிருந்து யானைகள் முதலைகள் போன்ற மிருகங்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள தன்னுடைய பெரிய மூக்கு (இப்பொழுது நாம் அதை தும்பிக்கை என்று கூறுகிறோம்) உதவியாக இருப்பதை உணர்ந்து சந்தோஷமாக காட்டில் தனிக்காட்டு ராஜா போல் அலைந்து திரிந்து இன்று அளவும் காட்டு ராஜாவாக உலா வருகின்றன.
(மேலே சொன்ன கதை ஆப்பிரிக்காவின் பழக்கதைகளில் இருந்து எடுக்கப்பட்டது).
Translated in Tamil by Kovai Krishnan
No comments:
Post a Comment