Saturday, March 30, 2024

இளவரசனும் மலர் ராணியின் மகளும் பாகம் 3

 

இளவரசன் இன்னும் ஒரு வருடம் பயணித்த பிறகு அந்த மூன்றாவது கிழவரையும் சந்தித்தார்.  மலர் அரசியின்  மகளைப் பற்றிய  கேள்விக்கு அவர் கூறிய பதில் “ நீ தேடிக் கொண்டிருக்கும் பறக்கும் நாகம் இங்கிருந்து நாம் பார்க்கும் மலையின் மறுபக்கம் இருக்கிறது.  இப்பொழுது அதற்கு தூங்கும் நேரம்”  இளவரசனின் குழப்ப பார்வையை புரிந்து கொண்ட அந்த கிழவர், “ அந்த பறக்கும் நாகம் ஒரு வருடம் தூங்கும்,  பிறகு ஒரு வருடம் முழித்துக் கொண்டிருக்கும் “ என்று விளக்கிய உடன்,  இதை கேட்ட  அந்த இளவரசன் தன் பயணத்தை தொடங்க நினைக்கும் போது அந்த கிழவர் குறுக்கிட்டு “உனக்கு அந்த ராணியின் மகளை பார்க்க வேண்டும் என்றால் , முதல் மலையை தாண்டி இரண்டாவது மலையில் இருக்க வாய்ப்பு அதிகம் “ என்று கூறினார் . இதை கேட்டு குழப்பத்தில் இருந்த இளவரசனுக்கு கிழவர் மேலும் கூறினார். “  அந்த பறக்கும் நாகத்தின் தாயார் இரண்டாவது மலையில் இருக்கிறார்.  நீ தேடிக் கொண்டிருக்கும் இளவரசி தினமும் அந்த அம்மையாரை சந்திக்க செல்வார் . “  இதைக் கேட்டவுடன் இளவரசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து,  அந்த பெரியவருக்கு நன்றி கூறினார்.  பிறகு அந்த இரண்டாவது மலையை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தார்.

 


அந்த இரண்டாவது மலையை நெருங்கும் போது,  ஒரு தங்கத்தால் ஆன ஒரு கோட்டையில் வைரங்கள் பதித்திருந்த ஜன்னல் கதவுகள் இருப்பதை கண்டார்.  அவர் அந்த தங்க கோட்டைக்குள் நுழையும் போது அவரை நோக்கி 7 பறக்கும் நாகங்கள் வருவதை கண்டார்.  அவை இவரைப் பார்த்து “ தங்களுக்கு என்ன வேண்டும் ?  என்று கேட்டனர் . அப்பொழுது இளவரசர் “ உங்கள் தலைவனான பறக்கும் நாகத்தின் அன்னையைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன் . அவருக்காக  நான் வேலை செய்ய விரும்புகிறேன்

 என்று கூறியவுடன் மகிழ்ச்சி அடைந்தன அந்த பறக்கும் நாகங்கள் . அதில் மூத்த நாகம் அந்த இளவரசனை நோக்கி “வா உன்னை அவரது தாயிடம் அழைத்துச் செல்கிறோம்”  என்று கூறி  பதினோரு பெரிய அறைகளை தாண்டி அழைத்துச் சென்றனர் . அந்த அறைகள் முழுவதும் தங்கத்தாலும் வைரத்தாலும் ஜோடிக்கப்பட்டிருந்தன . பன்னிரண்டாவது அருகில் அந்தத் தாய் நாகம் ஒரு வைர சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் .

 அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகானவராக இல்லாது இருந்தாலும் , அவருக்கு மூன்று தலை இருந்தது . அவருடைய குரலும் கர்ண கொடூரமாக இருந்தது.  ஆனாலும் இளவரசன் அந்த அன்னையைப் பார்த்து அன்பாக சிரித்தார் .

 


(இந்த கதை ஐரோப்பாவின் பழக்கதையிலிருந்து தழுவி எழுதப்பட்ட மூன்றாவது பாகம்)

No comments:

Post a Comment