Monday, March 25, 2024

தந்திரத்தால் உலகையே வளைக்கலாம்


இன்று நாம் பார்க்கப் போகும் கதை உங்களுக்கு மிகவும் பிடித்த காட்டு மிருகங்களை பற்றியது.

 எல்லா காடுகளிலும் இருப்பது போல் இந்த காட்டிலும் ஒரு புலியும் ஒரு நரியும் திரிந்து கொண்டிருந்தது. நரியின் துரதிருஷ்டத்தின் காரணமாக அன்று புலி மிகவும் பசியாக இருக்கும் போது அந்த நரி எதிரே வந்தது.



புலி தன்னுடைய பற்களை நரநரவென்று கடித்து அந்த நரியின் மேல் பாய தயார் ஆனது. உஷாரான நரி அந்த புலியை பார்த்து சொன்னதுதாங்கள் இந்த காட்டில் ராஜா ஆனால் நானும் பலம் பொருந்தியவன் தான் உங்களை மாதிரி தைரியசாலியும் தான் .மக்கள் என்னை பார்த்து பயப்படுகின்றனர் . ஆகவே இப்பொழுது தயவு செய்து என்னை தங்கள் நண்பனாக ஏற்றுக் கொண்டு உங்களுக்கு உதவி செய்ய அனுமதி தாருங்கள்என்று கூறியது. என்ன கதை அளக்கிறாயா ? “மக்கள் உன்னை பார்த்து பயப்படுவார்கள் என்று சொல்லி என்னை ஏமாற்ற பார்க்கிறாயா ? என்று கேட்டவுடன் நரிதயவு செய்து நான் சொல்வதை கேளுங்கள் என்னுடன் வாருங்கள் நான் முன்னே செல்கிறேன் நீங்கள் என்னை பின்தொடர்ந்தால் மக்கள் என்னை பார்த்து எப்படி பயப்படுவார்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள் பிறகு நாம் இருவரும் சேர்ந்து செயல்படலாம் அது இருவருக்கும் நன்மை பயக்கும்என்று ஆசை வார்த்தை கூறியது.

புலிக்கு நரியின் பேச்சில் நம்பிக்கை இல்லை எனிலும் அதை சோதிக்க எண்ணி அதன் பின்னால் நடக்க தயாரானது நரி . புலி தொடர்ந்து வர அந்த நகரத்தின் முக்கியமான சாலையில் நடக்க ஆரம்பித்தது.



அது முக்கியமான சாலை என்பதால் சிறிது நேரத்தில் மக்கள் அங்கு நடமாட ஆரம்பித்தனர் . நரியை கண்ட அவர்கள் அதை லட்சியம் செய்யாமல் நடக்க ஆரம்பித்தபோது பின்னால் வந்த புலியை கண்டு பயந்து நடுங்கி அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்கள்.

நரி வெற்றி புன்னகையுடன் புலியை பார்த்துஇப்பொழுது என்னை நம்புகிறீர்களாஎன்று கேட்டவுடன் புலி  மக்கள் தன்னைப் பார்த்து ஓடுவதை ,நரியை பார்த்து ஓடுகிறார்கள் என்று தவறாக எண்ணி நரியை ஒரு மரியாதையுடன் பார்த்தது. இனி இந்த நரியுடன் நடந்தால் தான் தனக்கு மரியாதை என்று எண்ணி நரியை தன் உற்ற நண்பனாக ஏற்றுக் கொண்டது .இவ்வாறாக நரி தன் உயிரை காப்பாற்றிக் கொண்டதுடன் அந்த காட்டில் ராஜாவுடைய உற்ற  நண்பனாக உலா வர ஆரம்பித்ததில் அதன் மதிப்பு காட்டில் பன் மடங்கு அதிகரித்தது .

(இந்த கதை சீனாவின் பழங்கதைகளில் இருந்து எடுக்கப்பட்டது)

 

 

Translated in Tamil by Kovai Krishnan

No comments:

Post a Comment