பறக்கும் நாகத்தின் அன்னைக்கு அந்த
குதிரையை மூன்றாவது நாளும் இளவரசன் பத்திரமாக கொண்டு சேர்த்ததும் அதிர்ச்சியில் மௌனமானார் . அந்த இளவரசனை பார்த்து
“ இதற்கு தங்களுக்கு என்ன பரிசு வேண்டும் “ என்று கேட்பதற்கு , “இந்த குதிரையின் குட்டியை எனக்கு பரிசாக கொடுங்கள்” என்று கேட்டார் . எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனே
அதற்கு அந்த அன்னை சம்மதித்தார் . அதனுடன் இளவரசனுக்கு ஒரு தங்க கவசத்தையும் பரிசாக
அளித்தார். இந்த தடவையும் அவரை விருந்திற்கு
அழைத்துச் சென்றனர். ஆனால் நடுவில் அவர் யார்
கண்ணிலும் படாமல் குதிரை லாயத்திற்கு சென்றார் . அங்கு இருந்த குதிரைக்குட்டியின் மீது
சவாரி செய்து தான் தினமும் வரும் புல்வெளியை அடைந்தார் . அன்று நடு இரவில் மலர் ராணியின்
மகளும் அங்கு வந்து சேர்ந்தார் . அங்கிருந்து அந்தக் குதிரையில் ஏறி அவர்கள் மலர் ராணியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்கள்.
சிறிது நேரத்தில் இவர்கள் இருவரும் இல்லாததைக் கண்ட பறக்கும் நாகத்தின் அன்னை
தன்னுடைய
சகோதரனை ( குளிர் காலம்) எழுப்ப முயன்றார். ஆனால் இது அவர் தூங்கும் ஆண்டு என்பதால் அவரை எளிதாக எழுப்ப முடியவில்லை. ஆனாலும் மிகவும் கஷ்டப்பட்டு அவரை எழுப்பினார் . விஷயத்தை கேள்விப்பட்ட அந்த பறக்கும் நாகம் மலர் ராணியின் ராஜ்யத்தை அடக்க நினைத்து அதன் மீது போர் தொடுத்தார் . ஆனால் தன்னைச் சுற்றி அந்த மலர் ராணி ஒரு மலர் தோட்டத்தை அமைத்தார் . அந்தத் தோட்டம் இவ்வளவு அடர்த்தியாக இருந்ததால் அதனால் அதற்குள் எதாலும் நுழைய முடியவில்லை . இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு மலர் ராணி தன் மகளை அந்த இளவரசனுக்கு மணமுடித்தாள் . அவளுடைய ஒரே கோரிக்கை தன்னுடைய மகள் இளவரசனுடன் கோடை காலத்தில் மட்டும்தான் இருக்க முடியும் , பனிக்காலத்தில் அவள் மலர் ராணியின் வீட்டிற்கு வந்து தங்க வேண்டும் என்பதுதான். இதற்கு இந்த இளவரசனும் சம்மதித்தான் . ஆகவேதான் இன்றும் மலர் ராணியின் மகள் 6 மாதம் இளவரசனின் கோட்டையிலும், மீதி ஆறு மாதம் பூத்துக் குலுங்கும் தன் அன்னையின் இடத்திலும் வாழ்கிறார் . நமக்கும் நறுமணங்கள் வீசும் பூக்கள் ஆறு மாதம் கிடைக்கின்றன.
இந்தக் கதை தான் வசந்த காலம் , இலையுதிர் காலம், கோடை காலம். மற்றும் குளிர் காலத்தின் அடையாளமாக ஐரோப்பாவில் கருதப்படுகிறது.
(“ இளவரசனும் மலர் ராணியின் மகளும் “
கதை இத்துடன் முடிகிறது . இது ஒரு ஐரோப்பிய பழங்கதைகளில் தழுவி எழுதப்பட்டது).
No comments:
Post a Comment